Popular Posts

About Me

My photo
காட்டாறு போல் பாய்ந்தோடும் வாழ்கையில், ஒரு மேட்டோரம் தஞ்சமடையாமல், எதிர்நீச்சல் போடுவோரை தான் இந்த உலகம் ஏறெடுத்துப் பார்கின்றது. சோதனைகளை சவால்களாக பார்க்க பழகிக் கொண்டால், முயற்சிகள் வெறும் முடிவுகளை நோக்கிச் செல்லாமல், ஒரு சாதனைக்கு விதையாகும்... காலத்தின் ஏடுகளில், நீ கட்டாயம் பதிவு பெறுவாய்! காலத்தை வென்றவனாக..

Total Pageviews

Tuesday, November 1, 2011

மழை

மனித இனத்திலும் சில நல்ல உள்ளங்களை படைத்தமைக்கு இறைவன் விடும் ஆனந்த கண்ணீர்!!!

Thursday, March 17, 2011

அம்மா !

உலகத்தில் ஒவொன்றைறாய் உயிர்கள் பல இருக்க,
ஒரு உயிருக்குள் இன்னொரு உயிரைச்சுமக்கும் அதிசயம்.

மறதி

மறதி என்பது சில நேரங்களில் வரம் தான்,
ஆனால் மறக்கபடுபவர்களுக்கு தான் அது சாபம்.

அவர்கள் மறக்கப்படவில்லை மறுக்கபடுகிறார்கள்...

Tuesday, February 1, 2011

கிறுக்கல்கள்

நட்பு :
உன்னை உன் போல் இருக்க அனுமதிக்கும்,
உறவிலும் மேலான ஒரு உன்னத உணர்வு...

உன்னிடம் உண்மையாய் பழகியர்வர்கள்,
உண்மையாக பழகியது போல உன்னை நம்பவைதவர்கள்,
இந்த வேறுபாட்டினை , இவர்களின் பிரிவில் தான் உணரமுடியும்...

பிரிவு பிணி தான் எனினும்,
அதில் ஒரு புரிதல் என்பது ஆறுதல் தானே???

பிரிந்து சென்ற நட்புக்கு என் வருத்தங்கள்...ஆழ்ந்த அனுதாபங்கள்...
நீ ஒரு உண்மையான ஒரு நண்பனை இழக்க துணிந்துவிட்டாய்...
பிரித்து காட்டிய வகையில் என் இறைவனுக்கு நன்றி...